ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைபற்றிய பின்னர் அமெரிக்காவுடனான அதிகார பூர்வமான பேச்சுவார்த்தையை கடந்த வாரம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து ரஷ்யாவும் தாலிபானை அழைத்து இருந்தது. OCT 20 வது தேதி மாஸ்கோவில் நடக்கவுள்ள தாலிபான்வுடனான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அதிபர் விளம்டிபுடின் இந்திய பிரதமர் நரெந்திர மோடியை அழைதிருந்தார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியா பங்கேற்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா அந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் தொடர்பாக மாஸ்கோவில் அக்டோபர் 20ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் தலைமையில் சர்வதேசக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தலிபான்களுக்கும் ரஷ்யா அழைப்பு விடுக்கவுள்ளது.
இந்த நிலையில் 90களில் தலிபான்களின் ஆட்சி அச்சம் தரும் வகையில் இருந்ததால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர். ஆனால், மக்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தலிபான்கள் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.