ரிஷி சுனக் பிரிட்டனுக்கே மிகவும் விசுவாசமானவர்
பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சவாளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வானதை இந்தியாவே கொண்டாடி வரும் நிலையில் இந்த கொண்டாட்டங்கள் தேவையற்ற்து என்பது போல Infosys முன்னாள் CAOவும் பிரபல பேச்சாளரும் மோகன் தாஸ் பாய் கருத்து தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக் பிரிட்டனுக்கே மிகவும் விசுவாசமானவர் என்று கூறிய அவர். நமக்கு ஆதரவாக அவர் செயல்படுவார் என இந்தியா எதிர்ப்பார்க்க கூடாது என தெரிவித்தார்.
அது தவிர இந்தியாவிடம் கடுமையாக இருப்பார் என்றும் மோகன் தாஸ் பாய் தெரிவித்துள்ளார்.