தென் அமெரிக்காவில் மிகப்பெரிய நாடு பிரேசில். பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் உலகின் ஐந்தாவது பெரிய நாடு. மக்கள்தொகை 21 கோடியைத் தொட்டுவிட்டது. காபி உற்பத்தியில் உலக அளவில் முதலிடம், புதிய உலக அதிசயத்தில் இடம்பெற்றுள்ள இயேசு சிலை, கால்பந்துப் போட்டியில் 5 முறை உலகக் கோப்பையை வென்றது என்று பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தமான நாடு. இந்த நாட்டின் முதல் பெண் அதிபராகத் தேர்வானவர், டில்மா வானா ரூசெஃப் (Dilma Vana Rousseff). பல்கேரியாவிலிருந்து புலம்பெயர்ந்த பள்ளி ஆசிரியரின் மகளான இவர், சிறந்த பொருளாதார நிபுணர். அரசியலில் நுழைந்து பல்வேறு பதவிகளைக் கடந்து பிரேசிலின் அதிபரானார். ஆனால், நாட்டு நிதியை முறைகேடாக கையாண்ட குற்றச்சாட்டில் சிக்கி, 2016ஆம் ஆண்டில் பதவியை இழந்தார். இப்போது, ஜெர் போல்சோனரோ (Jair Bolsonaro) என்பவர் அதிபராக உள்ளார்.
கால்பந்து தேசம்!