தென் அமெரிக்க கண்டத்தில் அமைந்திருக்கும் சிலி (Chile), வித்தியாசமான புவியியல் பரப்பளவில் அமைந்திருக்கும் நாடு. உலகின் நீளமான மற்றும் குறுகிய நாடு என்பார்கள். அதாவது, தெற்கு-வடக்காக 4,630 கிலோமீட்டராக நீண்டிருக்கும். கிழக்கு-மேற்காக 430 கிலோமீட்டரில் மிகக்குறுகி காணப்படும். உலகிலேயே சிலியில்தான் நைட்ரேட் மிகுதியாக கிடைகிறது. உலகின் தாமிர வளங்களில் பாதிக்கு மேல் சிலியில்தான் உள்ளது என்கிறார்கள். உலகப் புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெருடா (Pablo Neruda) பிறந்த நாடு இது. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞரான இவர், சமூகப் போராளியாகவும் தன் செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளார். The skin of the earth is same everywhere (பூமியின் தோல் உலகெங்கும் ஒன்றுதான்) என்பது இவரது புகழ்பெற்ற கவிதை வரிகள். 1971ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்.
