மலை உச்சி, நடு கடல், எரிமலை அருகே என பல இடங்களிள் திரைபடங்களூக்கான காட்சிகள் எடுத்து விட்ட நிலையில் வரலாற்றிலே முதன் முறையாக விண்வெளியில் திரைப்படம் எடுக்க ரஷ்யாவை சேர்ந்த பட குழுவினர் சர்வதேச விண்வெளி மையத்திற்க்கு International Space Station (ISS)சென்றுள்ளனர். கஜகஸ்தானில்(Kazakhstan) ரஷ்யா குத்தகைக்கு எடுத்த ராக்கேட் ஏவு தளத்தில் இருந்து கிளம்பிய தி சேலஞ்ச்(The Challenge) படம் நடிகை யூலியா பெரெசில்ட் (Yulia Peresild–37) , திரைப்பட இயக்குனர் கிளிம் ஷிபென்கோ (Klim Shipenko-38) International Space Station (ISS) சென்று அடைந்தனர்.
இவர்கள் 12 நாட்கள் அங்கு படபிடிப்பில் ஈடுப்பட்டு வரும் 17ம் தேதி பூமிக்கு திரும்ப உள்ளனர் இதன் மூலம் “நாசா(NASA)” மற்றும் “SPACE X” கை கோர்த்து விண்வெளியில் படம் எடுக்க நினைத்த Mission Impossible நடித்த டாம் க்ரூஸ்(Tom Cruise) முந்தி முன்னதாகவே படம் எடுக்க உள்ளனர்.