சீனாவுக்கு இந்தியா இறுதி எச்சரிக்கை!
பாக்கிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் சீனா தடுத்து நிறுத்தியதற்க்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச பயங்கரவாதியான மசுத் அசாரியின் சகோதரர் அப்துல் ராப்புக்கு தடை கொண்டு வர ஐனா பாதுகாப்பு கவுன்சில் இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்ச்சிகள் மேற்கொண்டன.
இதே போல் ஜூன் மாதம் நடந்த ஐனா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதி அப்துல் ரஹ்மான மக்கி என்பவனை தடுப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா அமெரிக்கா கூட்டாக பரிந்துரை செய்தன.
இதற்கு முன்னரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலரை தடுப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா கோரியபோது சீனா முட்டுக்கட்டை போட்டது.
அப்பொழுது சீனா கடைசி நேரத்தில் நிறுத்திவைத்தது. இந்நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ருச்சிர காம்போஜ் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் எவ்வித காரணமும் இன்றி நிறுத்தி வைத்தது முடிவுக்கு வர வேண்டும் என்றும். தடுப்பு கமிட்டி வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சர்வதேச பயங்கரவாதிகள் எதிராக நாம் போராடும் போது ஐ,நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஒரே குரலை வெளிபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.